aiimsperundurai icon

aiimsperundurai APK

The description of aiimsperundurai

"WE WANT AIIMS PERUNDURAI @ பெருந்துறை வேண்டும் இயக்கம்"
(Registered Under Trust Act , 1956, Reg. No. 201500019)

மேற்குத் தமிழக இளம் தூண்களே
பல தலைமுறைகளாக நாம் எதிர் பார்த்து வந்த, நமது மேற்குத் தமிழகம் பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு மகுடமாக பெருந்துறையில் நிறுவப்பட வேண்டிய இந்திய அரசின் உலகத் தரம் வாய்ந்த AIIMS மருத்துவக் கல்லூரி நிறுவனம் சில காரணங்களால் வேறு இடத்திற்குப் பரிந்துரைக்கபட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழிற்பேட்டை வளர்சிகளால் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரம் சீரழிந்து, மாசுபட்டு பெருநோய்களின் ஊற்றுக் கண்களாக விளங்கும் நமது மேற்குத் தமிழக பகுதி மாவட்டத்தின் மக்கள் அனைவரும் அன்றாடம் மற்றும் அவசிய தேவை AIIMS போன்ற ஓர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி. மேற்குத் தமிழக பகுதி மக்களாகிய நாம் அனைவரும் பல தலைமுறைகளுக்கு நலமுடன் வாழவும், உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி நமது பகுதி மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கவும், மாசுபட்ட சுற்றுச்சூழலுடன் சீரழிந்து மேரு நோய்களுடன் துன்புற்று வாழும் நமக்கு உலகத்தரம் வாய்ந்த, சலுகையான மருத்துவ வசதியைப் பெற்றிட நமக்கு ஓர் அறிய வைப்பு கிடைத்துள்ளது.
நமது பெருந்துறையில் இத்தகைய AIIMS மருத்துவக் கல்லூரி நிறுவனத்தை அமைப்பதற்கு மதிய, மாநில அரசாங்கங்களுக்கு நமது தேவையை நிரூபிக்க நம்மிடமிருந்து ஒரு மில்லியன் (பத்து லட்சம்) வாக்குகள்/கையெழுத்துகள் குறுகிய காலத்தில் உடனடியாகத் தேவைப்படுகிறது. ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத நாமக்கல்,திருப்பூர், நீலகிரி, கரூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின், அணைத்து வசதிகளும் தயாராக உள்ள பெருந்துரையில்தான் AIIMS அமைய வேண்டும் என நம் தேவையை நிரூபிக்க நாம் இப்பொழுது கடமைப்பட்டுள்ளோம்.

நமது கொங்கு மண்டலத்தில் உள்ள பல அமைப்புகள் இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பொது மக்களின் பேராதரவும் உடனடியாகத் தேவைப்படுகிறது. ஒரு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நமது மேற்குத் தமிழக மாவட்டங்களில் இதற்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நமது தேவையை மத்திய, மாநில அரசாங்களுக்கு ஆதரவு வாக்குகளாக -
1. இப்படிவதில் உங்கள் விபரங்களுடன் கையெழுத்திடவும்
2. "WE WANT AIIMS PERUNDURAI" என "0 99762 06555" க்கு (SMS) குறுஞ்செய்தி வாக்குகளாகவும்
3. "0 96559 29255" என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் வாக்குகளாகவும் (Missed Call Votes)
4. "AIIMS PERUNDURAI" என Google Play Store - ல் APP Download செய்து அதில் வாக்குகளாகவும்
5. www.aiimsperundurai.com மற்றும் .org என்ற இணையதளம் மூலம் உங்கள் வாக்குகளை குறுகிய காலத்தில், அதாவது இந்த மாத இறுதிக்குள் மொத்தம் பத்து லட்சம் வாக்குகள் மதிவு செய்ய அவசியமாகிறது
இதன் மூலம் வருடம்தோறும் நமது பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 மாணவ மாணவிகள் செலவு இல்லாமல் MBBS., M.S., DM.,Mch., போன்ற மருத்துவப் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் கொடிகளோ, லட்சகளோ, செலவழிக்காமல் சில ஆயிரங்கள் மட்டும் கட்டணமாகச் செலுத்தி உலகத்தரம் வாய்ந்த "AIIMS PERUNDURAI" மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பயில முடியும். இது மட்டும் அல்லாமல் துணை மருதிவக் கல்வி மூலம் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான நமது பகுதி மாணவ மாவவிகள் பயன் பெறமுடியும்.
இதோ இந்தப் படிவத்தில் உங்கள் விபரங்களை வக்குகளாகப் பதிவு செய்து 10 லட்சத்தில் நீங்களும் ஒருவராகுங்கள்.
அதோடு நின்றுவிடாமல் கட்டாயம் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு ஆர்வத்துடன் உள்ள உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் உடனடியாக இந்தத் தகல்வல்களைப் பகிருங்கள்.
"ஒன்றுபடுவோம் ஒற்றுமையுடன் தலைமுறைக்கு நலம் சேர்ப்போம் !"
சிறு துளிகளாகச் சேருவோம், பெரு வெள்ளமென AIIMS - ஐப் பெருந்துறைக்குப் பெறுவோம்
Health is wealth, Unite for Health, Unity is Strength

இப்படிக்கு

"WE WANT AIIMS PERUNDURAI@
AIIMS பெருந்துறை வேண்டும் இயக்கம்"
Show More
Advertisement
More From Developer
Comment Loading...
Ooops! No such content!
aiimsperundurai Tags
Add Tags

By adding tag words that describe for Games&Apps, you're helping to make these Games and Apps be more discoverable by other APKPure users.

Download
APKPure App